Thursday, November 12, 2009

Uyirin thedal...

Uyirudan ennai kandavargalukkellam
ennavendru kooruven,
nee illai en arugile endru!!

Saturday, April 25, 2009

காதல் வளர்ந்தது

மண்ணில் புதைந்த விதை போல
என் மனதினில் புதைந்து விட்டாய்..
சாரல் வளர்க்கும் செடி போல
என் காதலை வளர்த்து விட்டாய்...

வேர் வரை சென்று பாய்ந்தது
அந்த நீரின் நதி..
என் உயிர் வரை சென்று ஒலித்தது
நீ பேசிய முதல் வரி...

காற்றை எதிர்பார்த்து நிற்கும் கொடி போல,
நீ வரும் வழி பார்த்து நின்றிருந்தேன்..
வந்ததும் முகம் சாய்க்கும் அதன் குணம் போல
நீ வந்ததும் தலை சாய்த்துக்கிடந்தேன்...

காட்டினை எரித்த தீ போல
என் உயிரினைச்சுட்டெரித்த நீ,
என்னுள் விதைந்த தடமும் தெரியவில்லை
வளர்ந்த விதமும் புரியவில்லை!!

நிலவா? நீயா?

நிலவினை நிலவாகப் பார்க்கும் பிறர்க்கு
எவ்வாறு புரிய வைப்பேன்...
அது எனக்கு நீயாகத் தெரிகிறாய் என்று!

சிற்பியா நான்?

சிலையை வடித்த சிற்பிக்குப்புரியும், அது உடைந்ததன் வலி..
காதலை என் உயிரில் செதுக்கிய எனக்குத்தெரியும்,
என் காதல் சிதைந்ததன் வலி!

குழம்புகிறேன்

எனக்கு விளங்கவில்லை..
உன்னையும் என்னையும் பார்க்கும் முன்,
இவ்வுலகில் காதல் எங்கிருந்து வந்ததென்று!

கவிஞன்

கவிதை வராத கவிஞன்போல் ஆகிவிட்டேன்,
கனவில் வராத உன்னை நினைத்து...
நேரில் ஒரு முறை வந்துவிடு..
என் கவிதையும் மலர ஓர் வார்த்தை தந்துவிடு!

ஒரு சொல்...

உன் ஒரு சொல்லில் உயிர் வளர்கிறேன்...
மற்றவை உன் கையில்..
வார்த்தையா மௌனமா?!