Thursday, March 5, 2009

உனக்காக..

வருவாய் என திறந்து வைத்தேன் கண்களின் விழியை ,
வந்ததும் மறந்து விட்டேன் வார்த்தையின் மொழியை..
சென்றதும் உணர்ந்திருந்தேன் காதலின் வலியை,
இருந்தும் எதிர்பாத்திருந்தேன் நீ திரும்பும் வழியை...

நீ என் அருகில் இருக்க,
நினைத்தேன் சுற்றும் உலகை நிறுத்த..
மறுமுறை ஒருமுறை பிறக்க,
நினைத்தேன் உன் மடியில் இறக்க...

நிஜத்தினில் சென்றாலும் கனவினில் வந்துவிட்டாய்,
நான் உயிர் வாழ ஓர் வழியும் தந்துவிட்டாய்...
வார்த்தையில் விளங்காதை எல்லாம் ஓர் பார்வையில் விளக்கி விட்டாய்,
சில வார்த்தைகளை பேசி, என்னை மௌனமாக்கிவிட்டாய்..

நினைத்திருந்தேன் உன்னை மறக்க,
மறந்திருந்தேன் என்னை நினைக்க..
ஏனெனில் உன்னை பிரியும் ஒவ்வோர் கணம்,
நிச்சியமாக நான் ஓர் நடைபிணம்......!!!