Saturday, December 19, 2009

எழுத்தறிவித்தவர்க்கு...

கண்களில் கண்ட கனவுகள் எல்லாம்
கண் முன் நிஜமாக்கி வைத்தாய்..
கண் மூடித்திறக்கும் முன்
நிந்தன் கண் திறந்தே சென்று விட்டாய்...

வாழ்க்கையில் கண்ட சரிவுகள் எல்லாம்
தோள்களில் தாங்கி உயரச்செய்தாய்..
அத்தோள்களில் வளர்ந்த பிள்ளையின் முகம் கண்டு
அவன் மார்பிலேயே சாய்ந்துவிட்டாய்...

சேய் பேசக்காத்திருந்த உன் செவியினில், அதன்
முதல் வார்த்தை விழ சட்டென்று முகம் மலர்ந்தாய்..
இன்று நீ பேசக் காத்திருக்கும் செவிகளில்
மெளனத்தை மட்டுமே மொழியாக்கி வைத்தாய்...

இதயத்தின் துடிப்பை உன்னில் நிறுத்தி விட்டு
உயிரின் துடிப்பை இங்கே தந்து சென்றாய்..
உன்னுடன் வாழும் விதியை தூக்கிச்சென்று
உன்னைப்போல் வாழும் வழியைக் காட்டிச்சென்றாய்...

இருந்தாய் என்பதை ஒப்புக்கொள்ள வார்த்தையும் இல்லை,
இல்லை என்பதை புரிய வைக்க இங்கே ஓர் மொழியும் இல்லை!

5 comments:

Unknown said...

Very Very expressive...Really u can feel proud for being daughter of such a great Man.

Unknown said...

gud one ... very deep..

Unknown said...

u made ur dad sandron endru kaeta thanthi

Pritish Parmar said...

Gr8 jay.. :) he would always feel proud of u where he wil be...!!!

Unknown said...

Excellent and very touching...