Friday, March 5, 2010

விண்ணைத்தாண்டி.....?

கனவுகளுடன் பாதைகள் பல கடந்து
அழகானதோர் உருவம் எதிர் வரக்கண்டு,


கண்முன் கண்டது கனவோ என நினைத்து
தன் பெயர் மறந்து நின் பெயரில் கவிதைகள் பல பாடி மகிழ்ந்து,


சில வார்த்தைகள் பேச பல காலம் காத்திருந்து
கடந்து போகும் சாலைகளில் எல்லாம் என் கால்கள் தேய்ந்து,


விழியோரம் வழியும் ஒரே ஒரு பார்வைக்காக ஏங்கிக்கிடக்கும்
பல வேடிக்கை மனிதரைப்போல் நானும் வீழ்வேன் என நினைத்தாயோ??!